top of page

மொபைல் டிஸ்ப்ளே கிளாஸ் உடைந்து விட்டதா ????

Updated: May 17, 2022

மொபைல் டிஸ்ப்ளே கிளாஸ் உடைந்துவிட்டால் சர்வீஸ் சென்டருக்கு சென்று சர்வீஸ் செய்ய வேண்டும் என்று கேட்டால் 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று கேட்பார்கள் டிஸ்ப்ளே நன்றாகத்தான் உள்ளது இருந்தாலும் மேல் உள்ள கண்ணாடி மட்டும் உடைந்து உள்ளது நீங்கள் எல்லாவற்றையும் மாற்றியே ஆகவேண்டும் என்று சொல்வார்கள்.

விலை சற்று கூடுதலாக இருந்தாலும்

3 மாத உத்தரவாதத்துடன் புதிய ஒரிஜினல் டிஸ்ப்ளே மாற்றிக் கொடுப்பார்கள். இருந்தாலும் இந்த சேவையை குறைந்த விலையில் பயன்பெற வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளது

மொபைல் டிஸ்ப்ளே கிளாஸ் மட்டும் மாற்றுவதன் நன்மைகள்.....


டிஸ்ப்ளே கிளாஸ் மட்டும் மாற்றுவதால் உங்கள் ஒரிஜினல் டிஸ்ப்ளே எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே கிடைக்கும்


சர்வீஸ் சென்டரில் உங்கள் டிஸ்ப்ளே மாற்றுவதற்கான செலவைவிட 70% செலவு குறையும்


ஒரிஜினல் டிஸ்ப்ளேவில் அடைந்த எல்லாப் பயன்களையும் இதில்

பெறலாம்

குறைகள்

புதிய மொபைல் ஆக இருந்தால் சர்வீஸ் சென்டரில் கிடைக்கும் உத்திரவாதம் கிடைக்காது


இந்த சர்வீஸ் செய்யும்போது உங்கள் டிஸ்ப்ளே பழுதாகும் வாய்ப்பும் உள்ளது



உங்கள் ஊரில் மொபைல் டிஸ்ப்ளே கிளாஸ் மாற்றும் கடை எங்கு உள்ளது என்று தேடுங்கள்.

Google search செய்யுங்கள் நல்ல சர்வீஸ் சென்டரை தேர்ந்தெடுப்பது மிக மிக அவசியம்


china LCD அல்லது COPY DISPLAY மாற்றுவது நன்மைகள்


செலவு மிக மிகக் குறைவு


உடனடியாக சர்வீஸ் செய்து கொடுத்துவிடுவார்கள் சர்வீஸ் சென்டருக்கு சென்று காத்திருக்கும் நேரம் குறைவு

குறைகள்

ஒரிஜினல் டிஸ்பிலே என்று ஏமாற்றுவார்கள் ஒரிஜினல் டிஸ்ப்ளே authorized சர்வீஸ் சென்டரை தவிர வேறு எங்கும் கிடைக்காது


எந்தவித உத்தரவாதமும் கொடுக்க மாட்டார்கள் தரம் சற்று குறைந்தே இருக்கும்எந்தவித உத்தரவாதமும் கொடுக்க மாட்டார்கள் fitting சரியாக இருக்காது




bottom of page